Credit Suisse வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி எதிர்நோக்கி வரும் நிதி நெருக்கடி நிலைக்கு அதன் உயர் அதிகாரிகள் பொறுப்பா? என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து நிதி சந்தை மேற்பார்வை அதிகாரசபையினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக தண்டனைகள் விதிப்பது குறித்தும் பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த அதிகாரசபைக்கு குற்றவியல் விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கும் அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.