சுவிட்சர்லாந்தில் புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் புதிய கடவுச்சீட்டை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அடையாள அட்டை காலாவதியாகும் தருவாயில் இருந்தால் கான்டன் கடவுச்சீட்டு அலுவலகத்தின் ஊடாக புதிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.
கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைய அண்மித்திருந்தால் இரண்டையும் புதிதாக பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வந்த நபர் ஒருவருக்கான அடையாள அட்டைக்காக 65 சுவிஸ் பிராங்குகளும் கட்டணமும், சிப்பிங் கட்டணமாக 5 சுவிஸ் பிராங்குகளும் அறவீடு செய்யப்பட உள்ளது.
கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பனவற்றை பெற்றக்கொள்ள வேண்டுமாயின் 148 சுவிஸ் பிராங்குகள் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், மேலதிகமாக 10 பிராங்குகள் தபால் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.