சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவில் சிக்கில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Graubuenden கான்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பனிப்பாறை சரிவின் போது உயிரிழந்த இருவருடன் சென்ற மற்றுமொரு நபர் உயிர் ஆபத்து எதுவுமின்றி தப்பியுள்ளார்.
56 வயதான பெண் ஒருவரும், 52 வயதான ஆண் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.