நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த நான்கு பேர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ம் ஆகஸ்ட் மாதம் சூரிச் பகுதியில் நபர் ஒருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த நான்கு பேருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
பாரதூரமான முறையில் உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியமை நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் இந்த நான்கு ஆபிரிக்கப் பிரஜைகளும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆபிரிக்க பிரஜைகள் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.