நில அதிர்வினால் பேரழிவினை சந்தித்துள்ள துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் சுவிட்சர்லாந்து பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து மீட்பு பணியாளர்கள் குறித்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
மீட்பு பணியாளர்கள், மோப்ப நாய்கள் மற்றும் இராணுவத்தினர் இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு இன்னமும் சந்தர்ப்பம் உண்டு என சுவிஸ் மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர் காலம் என்பதனால் உடலிருந்து நீர்ச்சத்து அதிகளவில் வெளியேறாது எனவும் இதனால் 3-4 நாட்கள் வரையில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் வாழ சந்தர்ப்பம் உண்டு என குறிப்பிடுகின்றனர்.
பாதிப்பு குறித்து அவதானித்து நிவாரணங்களை அனுப்பி வைக்கவும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.