துருக்கிக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தூதரகம் மூடப்படுகின்றது.
துருக்கி தலைநகர் அங்காராவில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதுரகம் மற்றும் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள கொன்சோல் அலுவலகம் என்பன தற்காலிக அடிப்படையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, நெதர்லாந்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் தூதரகங்களை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.