சுவிட்சர்லாந்து வாகனங்களில் ஒட்டப்படும் கறுப்பு வெள்ளை CH ஸ்டிக்கர்கள் பயன்பாடு விரைவில் இல்லாதொழிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் பின் புறத்தில் CH என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள், ட்ரக் வகைகள், டெய்லர்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டமாயக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வாகனம் செலுத்தும் போது இந்த ஸ்டிக்கர் கட்டாயமானதல்ல.
எனினும் வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமானது.
1968ம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து குறித்த வியன்ன பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த CH என்பது நாட்டை குறிக்கின்றது என்பதுடன் இந்த எழுத்துக்களையும் அனுமத்திர இலக்கத் தகட்டிலேயே உள்ளடக்குவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தி வருகின்றது.