உக்ரைன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இரு நாடுகளினதும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தொடரும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி எலோயின் பீரெஸ்ட், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கீயிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
சுழற்சி முறையிலான ஜனாதிபதி பதவியை பீரெஸ்ட் ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக அவர், துருக்கி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஸ்யா நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து கண்டனத்தை வெளியிடுவதாக சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் சுவிட்சர்லாந்து வழங்கி வரும் உதவிகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.