சுவிட்சர்லாந்து நலாடாளுமன்ற வளாகத்தில் குண்டுப் பீதி காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டது.
பேர்னில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
நாடாளுமன்ற கட்டிடம் அதனை அண்டிய பகுதிகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் சந்தேக நபருக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ரோபோ ஒன்றின் உதவியுடன் கார் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசியல் ஸ்திரத்தன்மை உடைய நாடு என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி தனியாக பயணம் செய்யக்கூடிய வகையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் போது சில அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.