செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதரகங்களை மூடியமை குறித்து துருக்கி அதிருப்தி

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகள், தலைநகர் அங்காராவில் அமைந்துள்ள தங்களது  தூதரகங்களை மூடியமை குறித்து துருக்கி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

துருக்கி நாட்டுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் தூதுவர்கள் அழைக்கப்பட்டு இது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிக அடிப்படையில் சுவிட்சர்லாந்து, துருக்கி நாட்டுக்கான தூதரகத்தை மூடியது.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்குலக நாடுகள் துருக்கியின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுலைமான் சொய்லு குற்றம் சுமத்தியுள்ளார்.

சுவீடன் நேட்டோ படையில் இணைந்து கொள்வதற்கு துருக்கி எதிர்ப்பு வெளியிட்டு வரும் பின்னணியில் இந்த தூதரகங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, துருக்கியின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து அதன் பின்னரே தூதரகம் மீளத் திறக்கப்படும் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.