சுவிட்சர்லாந்து ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கும் யோசனையை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
வருடமொன்றுக்கு சுவிட்சர்லாந்து பணியாளர்களுக்கு தற்பொழுது நான்கு வாரங்கள் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படுகின்றது.
எனினும் சோசலிஸ்ட் கட்சி இந்த விடுமுறை காலம் ஐந்து வாரங்களாக நீடிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றில் யோசனை ஒன்றை முன்மொழிந்தது.
எனினும் இந்த யோசனை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்துடன் ஆறு வாரங்கள் விடுமுறை வழங்கும் யோசனைத் திட்டத்தை கடந்த 2012ம் ஆண்டு பொது வாக்கெடுப்பின் போது மக்கள் நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்த தீர்மானங்களில் அரசாங்கம் தலையீடு செய்யாது எனவும், அதனை தேசிய சட்டமாக கொண்டு வர முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.