செய்திகள்

சுவிட்சர்லாந்துக்கு சில பனை மரங்கள் பிரச்சினைகள் உருவாகியுள்ள நிலையில் அந்த பனை மரங்களை அகற்ற முடிவு.

சுவிட்சர்லாந்துக்கு சீனாவிலிருந்து ஒருவகை பனை மரங்கள் 1830களில் கொண்டு வரப்பட்டன.

தற்போது அவற்றால் சில பிரச்சினைகள் உருவாகியுள்ள நிலையில் அந்த பனை மரங்களை அகற்ற முடிவு.

டிசினோ மாகாணத்தில் பெருமளவில் பரவியுள்ள அந்த பனை மரங்கள் தற்போது பெரும் பிரச்சினையாகியுள்ளன.

அதாவது, இந்த பனை மரங்கள் வளரும் இடங்களைச் சுற்றி சுவிட்சர்லாந்தில் பொதுவாக காணப்படும் எந்த தாவரங்களும் முளைப்பதில்லை.

அத்துடன், பனை மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளால் தீப்பிடிக்கும் அபாயமும் காணப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, தீப்பிடிக்கும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளதால், தற்போது இந்த பனை மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.