செய்திகள்

சுவிட்சர்லாந்தில் 2022ம் ஆண்டில் மொத்தமாக 900 நில நடுக்கங்கள்!

சுவிட்சர்லாந்தில் கடந்த 2022ம் ஆண்டில் மொத்தமாக 900 நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து நில அதிர்வியல் நிறுவனத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு சுமார் இரண்டு நில அதிர்வுகள் என்ற அடிப்படையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸிற்கு அருகாமையில் அமைந்துள்ள Sierentz நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் திகதி 4.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

Triesenberg நகரில் 3.9 ரிச்டர் அளவில் நில அதிர்வு கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வுகள் காரணமாக எவ்வித சேதங்களும் இதுவரையில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991ம் ஆண்டில் இடம்பெற்ற நில அதிர்வு காரணமாக சிறு சேதம் சுவிட்சர்லாந்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.