சுவிட்சர்லாந்தில் உதவி தற்கொலைகள் அல்லது மருத்துவ உதவியுடான தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் 1125 பேர் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 15 வீத அதிகரிப்பாகும்.
நாட்பட்ட புற்று நோய் உடையவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடுமையான நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் இவ்வாறு மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதியளிக்கப்படுகின்றது.