சுவிட்சர்லாந்தில் வீட்டு விலைகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் வீட்டு விலைகளில் சிறிய அளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தனிக்குடும்ப வீடுகள் மற்றும் குடியிருப்பு தொகுதிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.
வீடுகளின் விலைகள் 0.7 வீதத்தினாலும் குடியிருப்புக்களின் விலைகள் 0.6 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதிகளவான அடகு வட்டி வீதத்தினால் சொத்துக் கொள்வனவிற்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளின் விலைகளை குறைக்க நேரிட்டுள்ளது.