சுவிட்சர்லாந்தில் விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனமான ஸ்கைகயிட் நிறுவனம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டை விடவும் 2022ம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் 1147007 விமானங்கள் சுவிட்சர்லாந்து வான் பரப்பில் பறந்துள்ளன.
எனினும், இது கடந்த 2019ம் ஆண்டை விடவும் 12 வீதம் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி மொத்தமாக 3999 விமானப் பயணங்கள் பதிவாகியுள்ளன.
ஜெனீவா மற்றும் சூரிச் விமான நிலையங்களில் அதிகளவான விமான போக்குவரத்து பதிவாகியுள்ளது.