கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகைகள் உயர்வடைந்துள்ளன.
வரலாறு காணாத அளவில் வாடகைத் தொகைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து முழுவதிலும் சராசரியாக வாடகைத் தொகை கடந்தமாதம் 0.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
சூக் மற்றும் லாவுசர்ன் கான்டன்களில் வாடகைத் தொகை 2.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் வட்டி வீதங்கள் 1.25 வீதத்திலிருந்து 1.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து வாடகைத் தொகைகள் 3 வீதம் வரையில் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளுக்கான பற்றாக்குறையும் வெகுவாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.