சுவிட்சர்லாந்தில் வட்டி வீதங்கள் மேலும் உயர்த்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து மத்திய வங்கி இந்த விடயத்தை தெரவித்துள்ளது.
உலக அளவில் அநேக நாடுகள் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளமை குறிப்பிடதக்கது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்தில் வட்டி வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி 0.5 வீதத்தினால் வட்டி வீதத்தை உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடன் அடிப்படையில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை கொள்வனவு செய்தவர்களுக்கு இந்த வட்டி வீதம் பாதக சூழ்நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முதலீடுகள் செய்யப்பட்டிருந்தால் அதன் ஊடாக கூடுதல் வருமானம் கிடைக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.