சுவிட்சர்லாந்தில் மைக்ரோஸ் வங்கியில் இரவில் பணம் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகின்றது.
ஏ.ரீ.எம் இயந்திரங்களில் இடம்பெற்று வரும் களவுச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு இரவு நேர சேவையை ரத்து செய்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பம் முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையில் ஏ.ரீ.எம். இயந்திரங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் அந்த நேரத்தில் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் ஏ.ரீ.எம். இயந்திரங்களில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.