சுவிட்சர்லாந்தில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து மத்திய ரயில்வே திணைக்களம் 245 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் நட்டமடைந்துள்ளன.
பாரியளவு நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பிராந்திய வழிகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.