செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஜெனீவா கார் கண்காட்சி

சுவிட்சர்லாந்தில் சில வருட இடைவெளியின் பின்னர் ஜெனீவா மோட்டார் கார் கண்காட்சி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 2024ம் ஆண்டில் சர்வதேச மோட்டார் கார் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கண்காட்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கோவிட் காரணமாக ரத்து செய்யப்பட்ட கண்காட்சி, உலகப் பொருளாதார நிலைமைகளை காரணம் காட்டி இந்த ஆண்டும் கண்காட்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரும் எண்ணிக்கையிலான கார் வகைகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.