செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பிள்ளை பராமரிப்பிற்கு கூடுதல் நிதி – அரசாங்கம் தீர்மானம்

சுவிட்சர்லாந்தில் பிள்ளை பராமரிப்பிற்கு கூடுதல் நிதி உதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு வெளியில் பராமரிக்கப்படும் சிறார்களுக்காக பெற்றோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

பிறந்தது முதல் ஆரம்பக் கல்வி கற்கும் வரையில் இவ்வாறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.

கான்டன்களினால் கொடுக்கப்படும் தொகைக்கு மேலதிகமாக மொத்த செலவில் 20 வீதம் சமஷ்டி அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ளது.

சிறுவர் பராமரிப்பு விவகாரத்தில் வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் மாறுபட்ட கொள்கைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.