சுவிட்சர்லாந்தில் தாய் தந்தை இருவருக்கும் பிள்ளை பராமரிப்பிற்காக சம அளவில் விடுமுறை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தாயைப் போன்றே தந்தைக்கும் சம அளவில் பிள்ளை பராமரிப்பு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிள்ளை பிறந்தவுடன் தாய் தந்தை இருவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் தலா 19 வாரங்கள் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென குடும்ப விவகாரங்கள் குறித்த சமஷ்டி இணைப்புச் செயலகம் இந்த பரிந்துரைகளை செய்துள்ளது.
இவ்வாறு தாயைப் போன்றே தந்தைக்கும் விடுமுறை வழங்குவதனால் நிறுவனங்களுக்கு பாரியளவில் நிதி இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.