சுவிட்சர்லாந்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள், முகநூல், யூடியூப் மற்றும் டுவிட்டர் போன்ற இணைய வழி ஊடகங்கள் தொடர்பில் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
புதிய கட்டுப்பாடுகள் பயனர்களை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையிலும், அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக புதிய உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.