சுவிட்சர்லாந்தில் கோவிட் கடன்களின் மூலமமாக சுமார் 300 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்ட 2767 பேருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நிதி மற்றும் பொருளாதார அமைச்சுக்களினால் வெளியிடப்பட்ட தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கட்டுமானம், உணவு விநியோகம், வர்த்தகம் போன்ற துறைகளில் மோசடியான முறையில் கடன் பெற்றுக்கொண்டு திரும்பச் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக 307 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட உள்ளதாகவும், இந்த தொகை முழுவதையும் அரசாங்கத்திற்கு நட்டமாக கருதப்பட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.