சுவிட்சர்லாந்தில் களவுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் நாட்டில் களவுச் சம்பவங்களின் எண்ணிக்கை 14 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு களவுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. 2022ம் ஆண்டில் மொத்தமாக 35732 களவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 14.6 வீத அதிகரிப்பாகும். மேலும் பாரதூரமான குற்றச் செயல்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது பாலியல் துஸ்பிரயோகம், தாக்குதல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16 வீதமாக உயர்வடைந்துள்ளது.