சுவிட்சர்லாந்தில் உயர் பதவி நிலைகளில் பெண்கள் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பெண்கள் உயர் பதவிகளை தற்பொழுது வகிக்கின்றனர்.
நிறைவேற்றுப் பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர், பொது முகாமையாளர், முகாமையாளர் உள்ளிட்ட நிறைவேற்றுத் தரம் கொண்ட பதவிகளில் பெண்கள் கூடுதலாக இடம் பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து 100 பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகளில் பால் நிலை இடைவெளி குறைக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணிப்பாளர் சபைகளில் பெண்களின் எண்ணிக்கை 26 வீதத்திலிருந்து 29 வீதமாக உயர்வடைந்துள்ளது.