சுவிட்சர்லாந்தில் அலைபேசிக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ்கொம் தொலைதொடர்பு சேவையின் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண அதிகரிப்பு குறித்து மின்னஞ்சல் அல்லது கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்த காலம் பூர்த்தியாகும் முன்னதாக இவ்வாறு கட்டணங்களை சுவிஸ்கொம் நிறுவனம் அதிகரிக்க உள்ளது.
சந்தாக் கட்டணங்களை இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.