செய்திகள்

சுவிட்சர்லாந்தில் உக்ரைன் அகதிகள் கண்டோன் லூசர்ன்க்கு எதிராக வழக்கு!

உக்ரைன் ஏதிலிகள் சுவிட்சர்லாந்து கான்டன் ஒன்றுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் கான்டனில் ஏதிலிகளுக்கு குறைந்தளவு நலன்கள் மட்டுமே கிடைக்கப் பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏனைய கான்டன்களுடன் ஒப்பீடு செய்யும் போது லூசர்ன் கான்டனில் ஏதிலிகளுக்கு குறைந்தளவு சமூக நலன்களே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து லூசர்ன் கான்டன் சட்ட மன்ற உறுப்பினரும் பசுமைக் கட்சியின் உறுப்பினருமான உர்பன் பைரை இந்த ஏதிலிகளுக்காக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

39 உக்ரைன் ஏதிலிகளின் சார்பில் அவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதுடன் அந்த ஏதிலிகளுக்கான சட்ட கட்டணங்களையும் அவரே செலுத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்டன் முகாமில் தங்கியிருந்தார் ஏதிலி ஒருவருக்கு நாளொன்றுக்கு 11.50 சுவிஸ் பிராங்குகளும், தனிப்பட்ட தங்குமிடத்தில் இருந்தால் 14.15 சுவிஸ் பிராங்குகளும் வழங்கப்படுகின்றன.

எனினும் இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தொகை என தெரிவிக்கப்படுகின்றது.

சமஷ்டி அரசாங்கம் ஒர் ஏதிலிக்காக தலா 550 சுவிஸ் பிராங்குகளை வழங்கிய போதிலும் லூசர்ன் கான்டன் 350 பிராங்குகளையே வழங்குகின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.