சுவிட்சர்லாந்தில் இரவு நேரத்தில் மதுபான விற்பனையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தி எடிக்ஸன் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.
ஜெனிவா மற்றும் வாட் ஆகிய கான்டன்களில் இந்த நடைமுறையை அமுல்படுத்தியதன் மூலம் சாதகமான பெறுபேறு கிடைக்க பெற்றுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
இரண்டு கான்டன்களிலும் கடந்த 2005 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அமல்படுத்தப்பட்டதன் பின்னர் மதுபான போதையினால் ஏற்படும் விபத்துக்கள் சண்டைகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி ஆகும் எண்ணிக்கை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
ஜெனிவா கான்டனில் இரவு 9 மணி முதல் காலை 7:00 மணி வரையில் மதுபானம் விற்பனை செய்ய முடியாது.
அதேபோன்று வாட் கன்டனில் இரவு 9 மணி முதல் காலை 6:00 மணி வரையில் மதுபானம் விற்பனை செய்ய முடியாது.
சுவிட்சர்லாந்தின் இரண்டு கான்டன்களில் மட்டுமே இந்த மதுபான விற்பனை தடை அமுலில் உள்ளது.
மதுபான வகைகளின் விலைகளை அதிகரித்தல் இரவு நேரத்தில் மதுபான விற்பனையை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஆபத்துக்களை மட்டுப்படுத்த முடியும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.