சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.
பேர்ன் கான்டனில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
ரயிலின் சாரதியும் மேலும் மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளனர்.
ரயில் தடம் புரண்ட காரணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேர்ன் கான்டனின் Fraubrunnen நகரின் Büren zum Hofபகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக இவ்வாறு ரயில் தடம் புரண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.