செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் ஒருவரின் முகத்தில் மாணவர்

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் ஒருவரின் முகத்தில் மாணவர் குத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜூரா கான்டனின் ப்ரன்ட்ரட் என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் நிலை பாடசாலையொன்றின் மாணவர் ஒருவர் வகுப்பறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த ஆசிரியர், மாணவரை எழுப்பிய போது குறித்த மாணவர் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.

இந்த தாக்குதலில் ஆசிரியர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உறக்கத்திலிருந்த தம்மை எழுப்பிய கோபத்தினால் மாணவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்திய மாணவன் வகுப்பறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளான்

இந்த சம்பவம் தொடர்பில் கான்டன் கல்வி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.