செய்திகள்

சுவிட்சர்லாந்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்த நேரிடும்!?

சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக கட்டணம் செலுத்த நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தேவையற்ற வகையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு செல்லும் போது இவ்வாறு கட்டணம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் அநேகமான அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறதளவான நோய் அறிகுறி காணப்படும் நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் போது இவ்வாறு கட்டணம் செலுத்த நேரிடலம் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கு தேசிய சுகாதார ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்களுக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.