சுவிட்சர்லாந்தின் முக்கிய கான்டன்களில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் தேசிய தேர்தல் நடைபெறும் பின்னணியில், பிராந்திய தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஜெனீவா, லுசார்ன் மற்றும் ரிக்கினோ ஆகிய கான்டன்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஜெனீவா கான்டனில் வலதுசாரி கட்சிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. குறிப்பாக மக்கள் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
தற்பொழுது கான்டனின் அமைச்சரவையில் இடதுசாரி கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
லூசர்ன் கான்டனிலும் மக்கள் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரிக்கினோ கான்டனில் வலதுசாரி கட்சிகள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
இம்முறை தேசிய தேர்தலின் போது வலதுசாரி கட்சிகளுக்கு அதிக வெற்றி வாய்ப்பு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர் Michael Hermann tதெரிவித்துள்ளார்.