சுவிட்சர்லாந்தின் சென் கேலனின் பாடசாலையொன்றில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Primarschule Grossacker என்ற பாடசாலையின் இவ்வாறு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் மூன்றில் ஒரு பகுதியான ஆசிரியர்கள் பதவி விலகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.
பாடசாலை நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து 49 ஆசிரியர்களில் 19 பேர் பதவி விலகியுள்ளனர்.
பாலர் பாடசாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியர்கள் பதவி விலகியுள்ளனர்.
இதனால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.