தகவல்கள்

சுவிசினுள் மருத்துவரிடம் செல்வது பற்றி விபரங்கள்

நோய் ஏர்ப்படும் வேளைகளில், உங்கள் குடும்ப மருத்துவரே உங்கள் முதல் பங்குதாரர்ராக இருப்பர். சுவிஸில்;, குடும்ப மருத்துவர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளை வளங்குவார்கள், இது அவர்களது பொறுப்பாகும்.

தேவைப்பட்டால், அவர்கள் உங்களை விசேஷ மருத்துவரிடம் அல்லது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைப்பார்கள். நீங்கள் உங்கள் சொந்த முடிவினால் ஒரு விசேஷ மருத்துவரிடம் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும், ஒரு ஆரம்ப ஆய்வுக்கு குடும்ப மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.

நீங்கள் ஒரு விபத்துக்காரனமாக மருத்தவமனையில் அவசரமாகக்கொண்டு செல்ல தேவைப்படாத வேளையில், நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரிடம் தொடர்புகொள்ளுங்கள். அவர் உங்களுக்கு தேவையான முதல் உதவியை வளங்குவார். மற்றும் உங்கள் தேவைக்கேற்ற விசேஷ மருத்துவரிடம் உங்களை அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்வார்.

உங்கள் கவனத்திற்கு !

இங்கு புலம்பேர்ந்து வந்து இருப்பவர்கள் முதலில் அவர்கள் பதிவு செய்திருக்கும் நிலையத்திற்கு செண்று அங்கு பணியாற்றும் ஊழியரோடு தொடர்பு கொள்ளுதல் வேண்டும். தேவைப்பட்டால், அவர் வேறு மருத்துவரிடம் தொடர்பை இணைத்துக்கொள்வார்.

நீங்கள் உங்கள் சொந்த முடிவினால் ஒரு விசேஷ மருத்துவரிடம் செல்வது

உங்கள் அடிப்படை உரிமைகளில் நீங்கள் உங்கள் சொந்த முடிவினால் ஒரு விசேஷ மருத்துவரிடம் செல்வதற்கு உரிமை உண்டு. இது உங்கள் அடிப்படை மருத்துவக்காப்புறுதியின் ஒப்பந்தத்தில் இதைப்பற்றி வேறு விபரங்ககள் இல்லாமல் இருந்தால் மட்டுமே. உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் செண்றால், அந்த விசேஷ மருத்துவரோடு உங்கள் சந்திப்பிற்காக நீங்கள் பல வாரங்கள் காத்திருக்கக்கூடும்.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.