சுவிசில் காலநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அதிக அளவில் பயணம் செய்யும் பாதைகளில் காலநிலை போராட்டக்காரர்கள் தங்களை வீதியில் பசை போட்டு ஒட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு வீதி போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்திய காலநிலை போராட்டக்காரர்களை பொலிசார் கைது செய்திருந்தனர்.
பிரபல கோத்தார்ட் சுரங்கப்பாதைக்கு அருகாமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சில மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.
வேறும் பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் போராட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டங்கள் காரணமாக வீதிகளில் ஏற்கனவே நிலவிய போக்குவரத்து நெரிசல் மேலும் உக்கிரமடைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் காலநிலை அவசரகால பிரகடனம் செய்யப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.