சுவிட்சர்லாந்தில் காற்றாலை மூலமான மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் கற்றாலைகள் ஊடாக 153 கிகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 2021ம் ஆண்டை விடவும் 5 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர் காலத்தில் அதிகளவில் காற்றாலை ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர் மின் உற்றும் மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி என்பன குளிர்காலத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் 41 உற்பத்தி நிலையங்களின் ஊடாக சுவிட்சர்லாந்தில் காற்றாலை வழியான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பீட்டளவில் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் சுவிட்சர்லர்நதில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே காணப்படுகின்றது.