தகவல்கள்

உங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது!

உங்கள் பிள்ளையின் ஒரு நல்ல மொழிவிருத்தியை, கர்ப்பகாலத்திலிருந்தே நீங்கள் ஊக்குவிக்க முடியும்.

உங்களைப் பற்றிக் கரப்பத்திலிருக்கும் பொழுதே, உங்கள் பிள்ளைக்கு விபரியுங்கள். உங்கள் மனதைத் தொடும் விடயங்களை அதனிடம் விபரியுங்கள்.

உங்கள் பிள்ளையுடன் எந்த மொழியில் (அல்லது எந்;த மொழிகளில்) வீட்டில் பேச விரும்புகின்றீர்கள் என்பது பற்றித் தீர்மானிப்பதற்கு, கீழ்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்:

எந்த மொழியில் பேசும்போது நீங்கள் சந்தோசமாக இருக்கின்றீர்களோ, எந்த மொழியை நீங்கள் மிகச் சரளமாகப் பேசுகின்றீர்களோ, அந்த மொழியில் உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள். அந்த மொழியில் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு பெரிய மொழியறிவைக் கொடுக்கலாம்.

அதன் மூலம், உங்கள் பிள்ளை தனது வாழ்வில் இன்னும் கற்கவிருக்கும் இதர மொழிகளுக்கான அடித்தளத்தை இடுகின்றீர்கள்.

பெற்றோராகிய நீங்கள், வேறுபட்ட மொழிகளை நன்றாகக் பேசுவீர்களாயின், உங்கள் பிள்ளைக்கு அது ஒரு பெறுமதிமிக்க ஆரம்பச்சூழலாகும்.
பெற்றோரில் யார் எந்த மொழியை நன்றாகப் பேசுகின்றாரோ, அவர் அந்த மொழியில் பிள்ளையுடன் பேச வேண்டும். இதன்மூலம் உங்கள் பிள்ளைக்கு இரண்டு மொழிகளுக்கான நல்ல வழிகாட்டிகள் இருப்பர்.

நீங்கள் எந்த மொழியைக் குடும்பத்துக்குள் பேசும் மொழியாக முடிவெடுத்தாலும், இந்த நாட்டு மொழியான டொய்ச்சை உங்கள் பிள்ளை கற்பது மிக முக்கியம். இங்கு இன்பமாக வாழ்வதற்கு, நண்பர் நண்பிகளைத் தேடிக்கொள்வதற்கு, அத்துடன் ஒரு நல்ல கல்வியறிவைப் பெறுவதற்கு ஒரு நல்ல டொய்ச் அறிவு தேவை. நீங்கள் வீட்டில் அன்றாடம் வேறு ஒரு மொழியைப் பேசினாலும் கூட, உங்கள் பிள்ளையினால் டொய்ச்சை நன்றாகக் கற்க முடியும்.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.