செய்திகள்

ஆயுத ஏற்றுமதிக்கு மறுப்பு தெரிவித்த சுவிட்சர்லாந்து மீது கோபம் இல்லை: ஜெர்மனி

சுவிட்சர்லாந்து மீது ஜெர்மனி கோபம் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்திற்கான ஜெர்மனிய தூதுவர் மைக்கல் ப்ளுக்கர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு ஜெர்மனி கோரிக்கை விடுத்திருருந்தது.

எனினும், சுவிட்சர்லாந்தின் நடுநிலை வெளியுறவுக் கொள்கைக்கு இது முரணானது என்ற காரணத்தினால் கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்திருந்தது.

ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு சுவிட்சர்லாந்திடம் பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும், சுவிட்சர்லாந்து தனது நிலைப்பாட்டிலிருந்து விலகாதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயுத ஏற்றுமதிக்கு மறுப்பு தெரிவித்து வரும் காரணத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்துடன் ஜெர்மனி கோபித்துக்கொள்ளவில்லை என தூதுவர் ப்ளுக்கர் தெரிவிக்கின்றார்.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.