செய்திகள்

அதிக குடியேறிகள் சூரிச் நோக்கி: அதிகரிக்கும் வாடகை

சூரிச்சில் தொடர்ச்சியாக குடியிருப்புக்களுக்கான வாடகைத் தொகை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடியேறிகளை மிகவும் கவர்ந்த ஓர் பகுதியாக சூரிச் காணப்படுகின்றது.

பல்தரப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் மற்றும் உயர் சம்பளம் போன்ற ஏதுக்களினால் அதிக எண்ணிக்கையிலான குடியேறிகள் சூரிச் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் மக்களின் குடியிருப்பு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துச் செல்லும் போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த 2011ம் ஆண்டின் பின்னர் சூரிச்சில் குடியேறிகளின் வருகை கடந்த ஆண்டில் வெகுவாக அதிகரித்துள்ளது.

குடியேற்றத்திற்கு நிகரான வகையில் வீட்டுத் தேவைகள் நிரம்பல் செய்யப்படாத காரணத்தினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.